Monday, March 25, 2019

சிவ தீட்சை அகஸ்திய மகரிஷி

சிவ தீட்சை
***********
இது அகத்தியர் அருளியது
தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ
தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை முறையாக
குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள்
சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்
ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம்
ஜெபித்துவோதக்
காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்
கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு
ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு
ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்
மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத
முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."
"ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க
முதல் தீட்சை சித்தியாகும். அப்போது
இறைவனின் திருக்காட்சியைக் காணலாம்
என்கிறார். காட்சியைக் காணும் போது
தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால்
இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக்
கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும்
என்கிறார் அகத்தியர்.
"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை
லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை
சித்தியாகும். அப்போது மூச்சு
உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும்
சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.
"சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு
செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்
யென்று லட்சம்
பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்
பாணுவைப்போற் தேகமெல்லாம்
ஒளியுமாகும்
துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு
துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று
முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி
மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."
"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற
மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க
மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது
சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.
"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க
நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது
மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும்
தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர்.
"பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு
பண்பாக யங் வங் றீங் றுந்தான்
துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி
தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்
அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு
அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்
குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும்
குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."
"யங் வங் றீங்" என்று லட்சம் முறைசெபிக்க
ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது
தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை
அணிந்துகொள் என்கிறார்.
"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை
செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும்.
அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன்
தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார்
அகத்தியர்.
"தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்
சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு
மென்றுலட்சம்
மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார்
வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்
நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு
நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்
ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து
அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."
"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க,
மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன்
அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன்
வா வா என்று அழைப்பார்கள் என்கிறார்
அகத்தியர்.
"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க
ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள்
வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார்
அகத்தியர்

Shiva Raja Yogi Dr.Suresh

Sunday, March 24, 2019

Agasthiyar Vasi yoga

Shiva Guru Vasi yogam

Vasi/siva yogam

Verse 505
அணைத்துமிகத்தான் உருக்கி எடுத்துப்பார்த்தால்
ஆதிமிக சோதி என்ற தங்கத் தாய்தான்
நினைத்தபடி தான்குடுக்குஞ் சோதித்தாயை
நித்தியமுஞ் சுத்தமதாய்ப் பூசைப்பண்ணி
மனதைமிகத் தானிருத்தி சோதிப்பார்த்தால்
மகத்தான வாசிசிவ யோகந் தன்னால்
சினந்து வருங்காலனவன் ஓடிப் போவான்
சிவசிவா குருபதத்தில் தெளிவாய் நில்லே

Translation:
Embracing it, melting it and when perceived
The Adi, the jyoti, the golden mother
It will grant the effulgent mother, as wished
Worshipping it daily with purity
Arresting the mind and when the flame is seen
Through the vasisiva yogam
The god of death who comes with anger will run away
Siva Sivaa, remain with clarity, at the guru padam.

Commentary:
The guru padam is ajna.  When the components are melted and raised to ajna the golden mother, Sakthi, will become visible.  When she is worshipped with purity and arresting the mind through vasi/siva yogam them one transcends death.  So, one should remain at the gurupadam with clarity.
Vasi/Siva yogam is the Tamil siddha pranayama. Vasi is when the breath with the prana is drawn in uttering va during inhalation and si during exhalation.  When the amrit is drawn down the pranayama is si va yoga as the nectar comes down and ascends through the chakra with the supreme consciousness. Thus, vasi and siva indicate the flow of prana in reverse orders.
In this context, it should be mentioned that va indicates air principle. Prana uses the air or breath as its vehicle.  It raises the kundalini fire.  The letter si indicates fire.  Thus, prana activates kundalini through vasi.  When the kundalini draws down the nectar it is stored at the vishuddhi cakra.  This chakra corresponds to the air principle, in our body.  Some siddha works say that the va letter marks the heart.  Thus the fire of kundalini,si, settles in the neck or heart and makes the person transcend time.

குரு பதம் என்பது ஆக்ஞையைக் குறிக்கும். உணர்வு அங்கு செல்லும்போதே ஞானம் ஏற்படுகிறது.  மேற் பாடல்களில் கூறிய பொருள்களை சேர்க்கும்போது ஆக்ஞையில் தங்கத் தாய் எனப்படும் சக்தி தென்படுகிறாள்.  அதற்கு ஒருவர் தூயவராக மனத்தை வாசி/சிவ யோகத்தால் நிறுத்தியவராக இருக்கவேண்டும்.  அவ்வாறு தேவியின் தரிசனத்தைப் பெற்றால் காலன் ஓடிப்போவான் என்கிறார் அகத்தியர்.  அதனால் ஒருவர் தெளிவுடன் குருபதம் எனப்படும் ஆக்னையில் நிற்க வேண்டும் என்கிறார் அவர்.

வாசி/சிவயோகம் என்பது தமிழ் சித்தர்களின் பிராணாயாம முறையாகும்.  பிராணன் மூச்சுடன் வா என்று உள்மூச்சிலும் சி என்று வெளி மூச்சிலும் உச்சரித்தபடி உடலுக்குள் வருவது வாசி யோகம்.  இங்கு வா என்பது காற்றுத் தத்துவத்தை, பிராணன் தனது வாகனமாக மூச்சை பயன்படுத்திக்கொள்கிறது, சி என்பது அக்னி தத்துவத்தையும் குறிக்கின்றன.  இவ்வாறு பிராணனின் மூலம் குண்டலினி அக்னி மேலே எழுப்பப் படுகிறது.  அவ்வாறு எழுந்த அக்னி லலாடத்திலிருந்து அமிர்தத்துடன் விசுத்தி சக்கரத்தில் சேகரிக்கப்படுகிறது.  நமது உடலில் லலாட சக்கரம் வ என்னும் காற்றுத் தத்துவத்தைக் குறிக்கிறது. சில நூல்கள் அனாகத சக்கரமான இதயம் அதைக் குறிக்கின்றது என்றும் கூறுகின்றன.  இவ்வாறு அமிர்தம் நமது விசுத்தியிலும் இதயத்திலும் நின்று நம்மை காலத்தைக் கடக்க வைக்கிறது.

Dr.V.Suresh
Shiva Raja Yogi

Monday, March 18, 2019

Shiva Guru Vasi yoga

www.supremeholisticinstitute.com
Raja Yogi Dr.V.Suresh PhD.,

சூரியனின் சஞ்சாரத்தை வைத்து நம் முன்னோர்கள் உயிரின் இயக்கத்தைப் பற்றி ஆராய்ந்து தெளிந்தார்கள். சந்திரனின் இயக்கம் உடலையும், மனதையும் கட்டுப்படுத்துவது. சூரியன்தான் ஆன்மாகாரகன். சூரியன் இல்லை என்றால் சந்திரன் இல்லை. ஆன்மா இல்லை என்றால் உயிர் இல்லை, உடல் இல்லை, மனமுமில்லை. பிரபஞ்ச சக்திகளை நம் பூமிக்கு தன் கதிர்களின் மூலம் கொண்டு வருவது சூரியனே. சூரியன் இல்லை என்றால் எந்த உயிரினங்களோ, தாவரங்களோ பூமியில் இருக்காது. சூரியன் கொண்டு வரும் பல்வேறு பிரபஞ்ச சக்திகளை பூமியில் உள்ள அனைத்தும் தேவைக்கேற்பக் கிரகித்துக் கொண்டு இயங்குகின்றன. எனவேதான் சூரியனையே கடவுளாக ஆதி தமிழர்கள் வணங்கியிருக்கிறார்கள்.

சூரிய கலை, சந்திர கலை என்று மூச்சு மாறி ஓடும் போது நம் உடலின் இயக்கங்கள் எப்படி மாறியமைகின்றதோ, அது போல சூரியன் உதித்து தோற்றத்தில் இருக்கும் பொழுது ஒரு விதமாகவும், மறைந்து விடும் பொழுது வேறு விதமாகவும் பஞ்சபூதங்களின் சூக்கும இயக்கங்கள் மாறி அமைகின்றன. இந்த அடிப்படையில்தான் சிருஷ்டியின் இயக்கம் பூமியில் நடைபெறுகிறது. நம் உடலில் பகல் முழுவதும் உழைப்பு, உணவு போன்ற இயக்கங்கள் நடக்கின்றன. இரவு ஓய்வு மற்றும் சீரமைப்பு பணிகள், கழிவுகளை பிரித்தெடுத்தல் போன்ற பணிகள் நடப்பது போல, பூமியிலும் சூரியனை மையமாகக் கொண்டு இத்தகைய பணிகள் சூக்குமமாக நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய இயக்கங்களுக்குத் தேவையான அடிப்படை ஆதார சக்தியான பிரபஞ்ச சக்தியை பூமிக்குக் கொண்டு வருவது சூரியனே.

அது மறையும் பொழுது சந்திரன் ஓரளவு சூரியன் இல்லாத குறையை நிவர்த்தி செய்கிறது. பகல் முழுவதும் சூரியனின் சஞ்சாரத்தால் பூமி வெப்பமடைகிறது. அந்த வெப்பம் சூரியன் மறைந்த பிறகு அதிகாலை நாலு மணி அளவில்தான் குறைந்து பூமி குளிரும். வெப்பம் அதிகமாக இருக்கும்போது பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள பிராண சக்தி (Oxygen) விட குளிரும் பொழுது அதன் மூலக் கூறமைப்பு அதிகமாகி ஓசோனாக இருக்கும். நம் பிராண சக்தியானது சாதாரண நிலையில் இருப்பதை விட ஓசோனாக இருக்கும்போதுதான் மிகவும் சக்தியளிப்பதாக இருக்கும். எனவே, அதிகாலைப் பொழுதில் குளிர்ச்சியான தன்மையால் நம் பூமியின் நிலப்பரப்பில் அதிக அளாவில் ஓசோன் பிராண வாய்வு இருக்கும். இது சூரியன் எழும்பியதும் இந்நிலை மாறிவிடும்.

அதிகாலை 4.30 மணிக்கு நம் பெருங்குடலும், நுரையீரலும் புத்துணர்வு பெற்று செயல்படத் துவங்கும் காலமாக விஞ்ஞானம் சொல்கிறது. அந்த நேரத்தில் நம் பூமிப் பரப்பில் அதிக ஓசோன் வாய்வு கூடியிருக்கும் பொழுது நாம் விழித்து, காலைக் கடன் முடித்து நாம் யோகப் பயிற்சிகள் செய்யும் பொழுது நமக்கு நாள் முழுவற்கும் தேவையான புத்துணர்வு கிடைத்து விடுகிறது என்று சொல்லப்படுகிறது. இதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து சொல்வதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஆனால், நம் முன்னோர்கள் இந்த நுட்பத்தை எப்படி உணர்ந்து, அதிகாலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று சொன்னார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், அவர்கள் அறிவின் திறம் விளங்கும்.

மனிதன் இரவு முழுவதும் தூங்கி விட்டு, அதிகாலையில் எழும்போது அவன் புத்துணர்வு பெற வேண்டும் என்று இயற்கையானது தயாராக காத்திருக்கிறது. ஆனால், மனிதன் இதைப் புரிந்து கொள்ளாமல் தாமதமாக எழுந்து புத்துணர்வை இழந்து சிரமப்படுகிறான், நாள் ஒன்றுக்கு நாம் சுவாசிக்கும் 21600 சுவாசங்களும் ஒரு குறிப்பட்ட கால அளவு நமது ஒவ்வொரு ஆதரங்களிலும் நடைபெற்று, சஞ்சரித்து நம் உடல் மற்றும், மன இயக்கங்களை நிரவகித்து நம் வாழ்நாளை தீர்மானிக்கின்றன. காலை 6 மணியில் இருந்து 6.40 வரை மூலாதாரத்தில் 600 சுவாசம் ஓடுகிறது. காலை 6.40 லிருந்து மதியம் 1.20 வரை சுவாதிஷ்டானத்தில் 6000 சுவாசங்கள் ஓடுகின்றன. மதியம் 1.20 லிருந்து இரவு 8.00 மணி வரை மணிபூரகத்தில் 6000 சுவாசங்கள் ஓடுகின்றன. இரவு 8.00 மணி முதல் அதிகாலை 2.40 வரை அநாகதத்தில் 6000 சுவாசங்கள் ஓடுகின்றன. அதிகாலை 2.40 முதல் 3.40 வரை விசுத்தியில் 1000 சுவாசங்கள் நடை பெறுகின்றது. அதிகாலை 3.40 லிருந்து 4.53 வரை ஆகஞாவில் 1000 சுவாசங்கள் ஓடுகின்றன. அதன் பிறகு காலை 6 மணி வரை சகஸ்ராரத்தில் 1000 சுவாசங்கள் நடை பெறுகின்றன.

இதில் ஆக்கினையிலும், சகஸ்ராரத்திலும் சுவாசம் நடைபெறும் பொழுது யோகப் பயிற்சிகள், பிராணாயாமம், ஆசனப் பயிற்சிகள் செய்வதால் பலன் இரட்டிப்பாகும் என்று சொல்லப்படுகிறது. மற்ற எல்லாச் சக்கரங்களையும், நாடிகளையும் கட்டுப்படுத்தும் சுரப்பிகள் இந்த இரண்டு ஆதரங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் நாள் முழுவதும் அவற்றின் இயக்கங்கள் சீராக இருக்கும் என்பது நம் முன்னோர்களின் அறிவுரையாகும். மிர்தம் என்றால் அழிவு. அமிர்தம் என்றால் அழிவற்றது என்பது பொருள். பிரதோச வேளையில் பிரபஞ்ச சக்தி குறைவாகிப் போகிறது. எனவே அந்த வேளையில் பிரபஞ்ச சக்தியை கிரகித்து வழங்கும் கோவில்களுக்குள் இருப்பது நல்லது என்பது கோட்பாடு.

அது போல அதிகாலையில் பிராணவாயுவில் ஆக்சிஜன் மூலக்கூறு அதிகமுடைய ஓசோன் இருப்பதால் இந்த வேளைகளில் சாதனங்களைக் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். இதையே அமிர்தக் காற்று என்றும், ப்ரம்மக் காற்று என்றும் சொல்வார்கள். பர்ம்ம சக்தி அதிகமுடைய வேளையையே ப்ரம்ம முகூர்த்தம் என்று சொல்லும் வழக்கம் வந்தது. இதில் ப்ராணாயாமம் மற்றும் யோகம் செய்பவர்களுக்கு அமிர்தம் உண்டால் ஏற்படும் பலன்கள் கிட்டும் என்பது சூட்சுமம். சாதாரண வாயுவில் இரண்டு ஆக்சிஜன் மூலக் கூறுகளே இருக்கும். அதிகாலை ஓசோன் கலந்த வாயுவில் 5 ஆக்சிஜன் மூலக் கூறுகள் இருக்கும். இதில் பஞ்சபூதங்களின் சூக்கும சக்திகளான தன்மாத்திரைகள் கலந்திருக்கும். எனவே அவற்றால் உருவான நம் உடலும், உடல் தத்துவங்களும் இத்த வேளைகளில் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் சிறப்பாகச் செயல்படும்.

அதாவது இரண்டு ஆக்சிஜன் மூலக்கூறு கொண்ட வாயுவில் ப்ருதிவி, அப்பு என்ற இரண்டு பஞ்சபூதத் தன்மாத்திரைகளே கலந்திருக்கும். அதோடு மூன்று ஆக்சிஜன் மூலக்கூறு கொண்ட தேயு, வாயு, ஆகாயம் என்ற மூன்று பஞ்சபூதத் தன்மாத்திரைகள் கலந்த ஓசோன் என்கிற அமிர்தப் ப்ரம்ம வாயு கலந்திடும் போது ஐந்து மூலக் கூறுகள் கொண்ட அதிர்தக் காற்றாக மாறி அதில் ஆகாயம், ப்ருதிவி, அப்பு, தேயு, வாயு ஆகிய ஐந்து பஞ்சபூதத் தன்மாத்திலைகளும் கலந்திருக்கும். இந்த அமிர்தக் காற்றை முறைப்படுத்தி ஏற்றுக் கொள்பவன் தேவர்களுக்கும் மேலானவன் என்பது சித்தர்கள் வாக்கு.
விடியலைக் காணாதவன் வாழ்வில் விடிவு காலமே ஏற்படாது என்பதே உண்மை. எனவே வாசியோகம் பயில்பவர்கள் அதிகாலை வேளையில் பயிற்சி செய்வது சிறப்பு.

இனி நமக்குள் வாசியாக நின்று சிவனாடும் சண்ட தாண்டவத்தைக் குறித்து பார்ப்போம். என் மூக்குத் துவாரங்களில் மூச்சு சொரூபமாய் இருந்து நடனம் செய்து வரும் உன்னை அறியாமல் பல பிறவிகளாய் உயிரை இழந்து வருகிறேன் பூரணமே. இடது நாசியும், வலது நாசியும் இரண்டாகப் பிரிந்து மூக்குத் துவாரங்களுக்கு முடிவாகிய புருவ மத்தியில் மறுபடியும் ஒன்றாகச் சேர்ந்து நடத்துகின்ற மூச்சு எனும் நடனத்தை, காலைத் தூக்கி சித்திரப் பதுமை போல நிறுத்த வழியறியேன் பூரணமே. இதிலே கால் என்று குறிப்பிடுவது காற்றை. சித்திரப் பதுமை என்று குறிப்பிடுவது நடராஜரின் உருவத்தை.

என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க
உன்னை யறியாமல் உயிரிழந்தேன் பூரணமே
சக்திசிவம் இரண்டாகி தான்முடிவி லொன்றாகி
சித்திரமாய் சின்ற திறமறியேன் பூரணமே.

சங்குரெண்டு தாரையொன்று
ஜன்னல்பின்ன லாகையால்
மங்கி மாறாதே யுலகில்
மானிடர்க ளெத்தனை
சங்கு ரெண்டையும் தவிர்த்து
தாரைபூத வல்லிரேல்
கொங்கைமங்கை பங்கரோடு
கூடிவாழ லாகுமே.

வலது, இடது மூக்குத் துவாரங்கள் சேருமிடம் புருவமத்தி. அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளும் சேருமிடம். இந்த இடத்தையே திரிவேணி சங்கமம் என்பார்கள். நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் பின்னலாய்ப் பின்னி எழுந்து நின்று விளையாடுவது போல இடகலையும், பிங்கலையும் கூடி புருவமத்தியில் சுழுமுனையோடு சேர்ந்து விளையாடும் இரகசியங்களை தெரிந்து கொள்ளாமலேயே மாண்டு போன மானிடர்கள் பல கோடி உண்டு. வலது நாசி, இடது நாசி இரண்டிலும் மூச்சை தனித்தனியாக இழுத்து நடத்தி, நிறுத்தி பிறகு இரண்டு நாசிகளிலும் மூச்சை இழுத்து நடத்தி, நிறுத்த சக்தி உடையவர்களானால் பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு ஸ்தனங்களை உடைய உமாதேவியரோடு கூடி இருக்கும் சிவபெருமானைச் சேர்ந்து வாழலாம்.

நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு
நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமோடு நீகுளிக்கும்
வேதவாக்யம் கேளுமின்
நெருப்புநீரும் உம்முளே
நினைத்துகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத்
துடர்ந்துகூட லாகுமே.

மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி எனும் சக்தியை மூச்சு எனும் மூலக் கனலால் கிளப்பி உச்சி வரை ஏற்றி விடுவீர்களேயானால், அதனால் ஏற்படும் உஷ்ணத்தால் ப்ரம்ம கபாலத்தில் இருந்து அமிர்தமானது சுரக்கும். அதை உண்டு சுகித்து, லயித்திருக்கும் போது உடம்பெல்லாம் வியர்த்து குளித்து விட்டு வந்தது போல் இருக்கும். இதுவே இரகஸ்யம். அதாவது மூச்சு எனும் நெருப்பும், நெய் எனும் அமிர்தமும், வியர்வை எனும் நீரும் நம்மிடத்திலே இருப்பதை யோகத்தால் அறிந்து, சொல்ல வல்லமை உடையவர்களானால், எல்லை கடந்த ஜோதியாகிய ப்ரம்மத்தில் கலந்திருக்கலாம்.

இந்த மூச்சு எனும் சூக்கும நிலையை உணர்த்தும் பொருட்டே காலைத்(காற்று) தூக்கி நடனம் ஆடுவது போல நடராஜர் சிலையை வடிவமைத்தனர் முன்னோர்கள். பரம் என்றால் ஆகாயம் அல்லது விண் அல்லது வெட்டவெளி பரமசிவம் என்றால் பரமாத்மா. பரமசிவமான பரமாத்மா நடனம் ஆடுவது போலக் காட்சி தரும் சித் + அம்பரம் சிதம்பரம் ஆகாயத் தத்துவத்தை உணர்த்தும் தலமாகும். அங்கே பக்தர்களுக்குக் காட்டப்படும் சிதம்பர இரகசியமும் வெட்டவெளியாகிய பரத்தைக் குறிப்பதே. அதாவது விண் என்கிற வெட்டவெளி. விண்ணே உயிராக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கியும், பிறகு வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியும் நடனமாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று வலது காலைக் காது வரை நீட்டி இடது கையை மேல் தூக்கி நடனம் ஆடும் போது போட்டியாக உடன் ஆடிய காளியானவள் காலைக் காது வரைத் தூக்க வெட்கம் அடைந்து தோல்வியை ஒப்புக் கொண்டதாக புராணக் கதை சொல்வார்கள். அந்தக் கதையின் உள் நோக்கத்தை சொல்வார் யாருமில்லை.

ப்ராணாயாமம் அல்லது சந்தியாவந்தனம் செய்பவர்கள் முதலில் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதற்காகவே நடராஜர் வலது காலைத் தூக்கி நடனம் ஆடுவது போலக் காட்டப்பட்டது. பிறகு வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதே நடராஜர் இடது காலைத் தூக்கி நடனம் ஆடுவது. உலைக்களத்தில் இரண்டு தோல் துருத்திகளை வைத்து இரண்டு கைகளால் மாற்றி மாற்றி அமுக்கி ஊதுவது போல வலதுகைப் பெருவிரல் மோதிர விரல்களை வலது இடது நாசிகளில் வைத்து, இரண்டு நாசிகள் வழியாகவும் ஒன்றை அடைத்து ஒன்றன் வழியாக மாற்றி மாற்றி காற்றை உள் இழுத்து நிறுத்த வேண்டும். இரண்டு மூச்சுகளையும் பின்னலாய் பின்னி உள்ளிருத்து நிறுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதே நடராஜர் ஒற்றைக் காலை காது வரை மேலே தூக்கி ஆடுவது போலக் காட்டப்படுவது.

குண்டலினி சக்தியே காளியாகச் சொல்லப்படுவதாகும். முறையாகப் பிராணாயாமம் செய்து வந்தால் அவள் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு உச்சி நோக்கி பயணிப்பாள் என்பதாகும். ஜீவாத்மா பரமாத்மாவை அடையத் தடையாக இருக்கும் மலங்கள் அனைத்துமே அரக்கனாக சித்தரிக்கப் படுகிறது. மூச்சுக் காற்றினால் குண்டலினியை மேலேற்ற முடியுமானால் நம் மேன்மைக்குத் தடையாக இருக்கும் மல மாயங்களாகிய அரக்கனை பரமாத்மாவானது அழித்துவிடும் என்றும் சித்தரிக்கப் பட்டுள்ளது. நாம் விடும் மூச்சுக்கு கால் எனறும் நூல் என்றும் பெயர் உண்டு. நூல் என்றோ ஒரு நாள் அறுபட்டு விடும் எனவே காலாகிய காற்றைப் பிடித்து மேலேறி வரவேண்டும் என்பதை விளக்குவதே நடராஜர் தத்துவம். அவர் காட்டுகிற அனைத்து நடனங்களும் யோகத் தத்துவங்களை உணர்த்துவதேயாகும்.

ஒருபாதந் தன்னைத் தூக்கி யொருபாதந் தன்னை மாற்றி
இருபாத மாடுகின்ற வியல்பைநீ யறிந்தா யானால்
குருபாத மென்று கூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
விருபாத னாகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே.

இறந்திடு மிருபத் தோரா யிரத் தறுநூறு பேறும்
இறந்திடு மிக்காயம் போனா லீசனைக் காண்ப தென்னாள்
மறந்திடா தறிவான் மூல வாசியை மேலே யேற்றிச்
சிறந்த தற்பரத்து நாகை லிங்கரைத் தரிசி நெஞ்சே.
- நெஞ்சறி விளக்கம்.

இருபத்தோராயிரத்தறநூறு பேரும் என்பது நாம் தினசரி சுவாசிக்கும் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். குருபாதம் கூறும் குறிப்பு என்றால் குரு சொல்லிக் கொடுக்கிற படி செய்தால் சூக்குமம் விளங்கும். இருபாத நாகை நாதர் என்றால் இடகலை, பிங்கலை வழியாக நடக்கும் நாகன் எனும் மூச்சைக் காட்ட கால்களைத் தூக்கி நடனஞ் செய்த நடராஜரது மலரடிகளைக் காண்பாய் நெஞ்சே. அதாவது அவர் காட்டும் வழியில் அல்லது அவர் கால்கள்(காற்று)போகும் வழியில் போய் பரத்தைக் காண்பாய் நெஞ்சே. உயர்வாய் இருந்து தான் தானாய் நடந்து கொண்டிருக்கும் நாகனென்னும் லிங்கத்தை அறிவாய் நெஞ்சே.

திரிவேணி சங்கமமெனும் மூன்று நாடிகளும் சந்திக்குமிடத்தில் லிங்கம் உள்ளது. அங்கே மூச்சை கொண்டு போய் நிலை நிறுத்தும் பொழுதுதான் வாசி வசப்படும். மூக்கு வழியாக இழுத்து, அண்ணாக்குக்குத் துவாரங்கள் வழியாக விடும் பொழுததான், வாசி புருவ மத்தியில் இயங்கும். இந்த வித்தைகளை குருமுகமாகக் கற்றுணர்ந்து வாசியை சகஸ்ரதளத்தை நோக்கி செலுத்தி மேன்மையடையலாம். இதற்கு அதிகாலை நேரம் மிக மிக உகந்ததாகும். இதில் சில ஐயப்பாடுகள் எழுகின்றன. ப்ராணாயாமம் வேறு, வாசி யோகம் வேறா ? என்று கேட்கிறார்கள். பல வகையான ப்ராணாயாமங்கள் இருக்கின்றன. வாசி யோக சாதகர்களுக்கு ப்ராணாயாமம் நல்ல அடிப்படையாக அமையும். அதே சமயம் ப்ராணாயாமம் என்பது மூச்சை ஒழுங்குபடுத்தி, அதன் பலனைத் தருவிப்பது. வாசி யோகம் என்பது சிவசக்தி ஐக்கியத்தை, சிவபோகத்தை ஏற்படுத்துவது. இந்த அளவில் இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை அறிந்து கொண்டால் போதுமானது.

Wednesday, March 13, 2019

Shiva Guru Vasi yoga

Shiva Guru Vasi yoga is Vedic Sanatana Dharma Eternal Yoga for Enlightenment & Eternality.

www.supremeholisticinstitute.com